Skip to content

2026ல் அதிமுக தனி பெரும்பான்மை ஆட்சி… எடப்பாடி பேச்சு

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.. 2021 தேர்தலில் 2% வாக்குகள் வித்தியாசத்திலேயே 43 தொகுதிகளில் அதிமுக தோற்றது. 2011ல் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. கருணாநிதி இருக்கும்போதே திமுகவால் எதிர்கட்சி அந்தஸ்து பெற முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக சேர்ந்து பெற்ற வாக்குகள் 41.33 சதவீதம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 23.5 % வாக்கு. 2024ல் அதிமுக-பாஜக சேர்ந்து 41.33 % வாக்கு பெற்றுள்ளது. மகளிர் வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்கு தான். அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு சுமார் 32 லட்சம் மடிக்கணினி கொடுத்தோம். கல்லூரி தொடங்கி 5 மாதங்களுக்கு பின் லேப்டாப் கொடுத்து என்ன பயன்..?.. தொடர் அழுத்தத்தால் மகளிருக்கு ரூ. 1000 வழங்கப்படுகிறது. எண்ணற்ற வாக்குறுதிகளை திமுக கிடப்பில் போட்டுள்ளது. அதிமுகவின் தாலிக்கு தங்கம், டூவீலர் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தம். அதிமுக ஆட்சியில் 32 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தோம். மாணவர்கள் நலன் கருதி லேப்டாப் கொடுக்கவில்லை. அவர்களின் ஓட்டுக்காக கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.விலைவாசி மின்கட்டண உயர்வால் வேதனையில் உள்ள மக்கள். நெல்கொள்முதல் நிலையங்களை மூடியதால், சாலையில் குவிக்கப்பட்ட நெல்மணிகள். எண்ணற்ற வாக்குறுதிகளை திமுக கிடப்பில் போட்டுள்ளது. பருவமழையால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும்.. மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. நெசவாளர்கள் வறுமையில் வாடி உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலையில் உள்ளனர் என்று இவ்வாறு பேசினார்.

error: Content is protected !!