Skip to content

அஜித் கலந்து கொள்ளும் “கார் ரேஸ்”… ரேஸ் உடையில் ”இந்தியன் பிலிம் இண்டஸ்ட்ரி” லோகோ

  • by Authour

நடிகர் அஜித் சினிமாவை எந்தளவுக்கு நேசிக்கிறாரோ அதே அளவுக்கு கார் ரேஸையும் நேசித்து வருகிறார் .அவர் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார் .இந்த கார் ரேஸ் பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது .அது பற்றி நாம் காணலாம்   இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் ‘இந்தியன் பிலிம் இண்டஸ்ட்ரி’ என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவித்துள்ளார். நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார்.’குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார்.அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்குகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கிள் தீவிரம் காட்டி வரும் அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் ‘இந்தியன் பிலிம் இண்டஸ்ட்ரி’ என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!