Skip to content

புது கார் வாங்கியதும் புது படத்தில் நடிக்கும் அஜித்

பிரபல நடிகர் அஜித் சினிமாவை போலவே கார் பந்தயத்தையும் நேசிக்க கூடியவர் .அதனால் அவர் கார் பந்தயம் முடிந்ததும் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது .

நடிகர் அஜித் ஒரு கார் பிரியர் என்பதை அனைவரும் அறிவர் .அதனால்தான் அவர் விதவிதமாக கார் வாங்கி வைத்த்துள்ளார் .இப்போது கூட அவர் புதிதாக வாங்கியுள்ள காரின் பெயர் McLaren Senna. மறைந்த பார்முலா 1 கார் ரேஸ் வீரர் அயர்டன் சென்னாவின் நினைவாக இந்த கார் உருவாக்கப்படுகிறது. அயர்டன் சென்னா நடிகர் அஜித்தின் ரோல் மாடல். அண்மையில் அவரின் நினைவுச் சிலை முன் மண்டியிட்டு கண்ணீர் மல்க நடிகர் அஜித் அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலானது. இந்நிலையில் அவர் சமீபத்தில் நடித்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வந்த குட் பேட் அக்லி படம் வெற்றிகரமாக ஓடியது .  நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் பிசியாக உள்ளார். அவர் துபாய் மற்றும் ஐரோப்பிய கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றியும் பெற்றார். இதையடுத்து அடுத்தக்கட்ட கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக ஆயத்தமாகி வருகிறார். வருகிற நவம்பர் மாதம் வரை கார் பந்தயங்களில் பங்குபெற முடிவெடுத்துள்ள அஜித், அதன் பின்னரே தன்னுடைய அடுத்த பட பணிகளை தொடங்க இருக்கிறாராம். அவர் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!