தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில் மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸில் தல அஜித் சார் பங்கேற்ற கார் பாதியில் பழுதாகி நின்றது அவரையும் அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கார் பழுதாகி நின்றது தொடர்பாக நடிகர் அஜித்திடம் கேட்கப்பட்டதற்கு, கவலைப்பட ஒன்றுமில்லை. பந்தயம் என்றால் அதுதான். ஆம், அது சோர்வடையச் செய்கிறது. ஆனால் எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும் என்றார்.

