கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் 65 ஆம் ஆண்டுஎ ல் ஆர் ஜி நாயுடு மற்றும் 11 ஆண்டு பெண்களுக்கான கேவிபி சுழற் கோப்பைக்கான ஆண் பெண் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி இன்று துவங்கி ஆறு நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த போட்டியினை மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் துவக்கி வைத்தார். இதில் ஆண்கள் பிரிவில் இந்தியன் நேவி இந்தியன்,
பேங்க் சென்னை, கேரளா ஸ்டேட் ஈபி, திருவனந்தபுரம் பெங்களூர் வாரன் பிபிசி, ஐஓபி சென்னை, இந்தியன் ஆர்மி நியூ டெல்லி, சென்ட்ரல் செகண்ட் ரேட்
நியூ டெல்லி, இந்தியன் ஏர்போர்ட் நியூ டெல்லி ஆகிய தேசிய அளவிலான ஆண்கள் அணியும் சதன் வெஸ்டன் ரயில்வே, ஹூப்ளி சதர்ன் சென்ட்ரல் ரயில்வே, செகந்திராபாத் சென்ட்ரல் செகரட்டரி ரேட் நியூ டெல்லி, கேரளா போலீஸ் பெண்கள் அணியும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி லீக் மற்றும் நாக்கோட் முறையில் நடைபெறுகிறது இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியன் நேவி மற்றும் யங் ஓரியன்ஸ் அணியும் மோதியதில் 73 க்கு 58 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் நேவி அணி வெற்றி பெற்றது. வருகின்ற 27 ஆம் தேதி அன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட உள்ளது.ம்