கரூரில் அனைத்து தொழில் சங்கங்கள்,தொழில் வாரி சம்மேளனங்கள் நடத்தும் அகில இந்திய பொது வேலை நிறுத்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள், தொழில்வாரி சம்மேளனங்கள் நடத்தும் அகில இந்திய பொது வேலை நிறுத்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் புதிய பென்ஷன் திட்டம் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் இரண்டையும் ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்கள் அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும், தேசிய பணமாக்கல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார திருத்த மசோதா 2022 வாபஸ் பெற வேண்டும், மின்சாரம் தனியார் மயத்தை கைவிட வேண்டும், முன்கூட்டியே மின்கட்டணம் செலுத்தும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.