அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் எனவும் தெரிவித்தார்.
டில்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .. அவர் கூறியதாவது..
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை. சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.இனியும் பாஜகவைச் சுற்றுவதில் பலன் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும். வௌிப்படையாக பேச முடியாது. தமிழக அரசின் புதிய ஓய்வூதிய த்திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் அமித்ஷா ஒருபோதும் தலைமையிடமாட்டார். அதிமுக விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமித்ஷா ஏற்கனவே செய்தியாளர்களிடம் கூறிவிட்டார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நைிலயில் மக்களின் கனவை எப்படி நிறைவேற்ற முடியும்?.2026 தேர்தலில்அதிமுக -பாஜக கூட்டணிதான் வெல்லும்.
உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தை கொண்டுவர உள்ளதாக நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். என்று இவ்வாறு தெரிவித்தார்.
அதிமுக பாஜக கூட்டணியில் அமமுக இடம்பெறுமா என்ற கேள்விக்கு மறுப்பு சொல்லாத பழனிசாமி.

