நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தினை மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, உள்ளிட்டோரும், எம்.பி. சு.வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.