Skip to content

புதிய போப் ஆண்டவர் தேர்வு…

உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22- ஆம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாடிகனில் உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் ரகசியமாக நடைபெற்றது. இதற்காக சுமார் 250 கார்டினல்கள் உலகம் முழுவதும் இருந்து வாடிகன் நகருக்கு வந்தனர். இருப்பினும் 80 வயதுக்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே போப் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் கரும்புகை வெளியேற்றப்பட்டது. இதையடுத்து ஓய்வு எடுக்கச் சென்ற கார்டினல்கள், இன்று 2வது முறையாக கூடிய புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போதும் கரும்புகை வெளியிடப்பட்டதால் புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை என தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தேவாலய புகைபோக்கியில் இருந்து வெண்புகை வெளியேற்றப்பட்டது. வெண்புகையை வெளியேறியதும் தேவலாயத்தை சூழ்ந்து இருந்த மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் லியோ XIV என்ற பெயரை ஏற்றுக்கொண்டார், வரலாற்றில் முதல் அமெரிக்காவை சேர்ந்தவர் போப்பாண்டவர் ஆனார். சிஸ்டைன் சேப்பல் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வருவதைக் கண்ட சுமார் 70 நிமிடங்களுக்குப் பிறகு,  செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் மைய பால்கனியில் புதிய போப் தோன்றினார். “உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்” என்று போப் லியோ XIV பால்கனியில் இருந்து தனது முதல் பொது வார்த்தைகளில் கூறினார்.
யார் இந்த புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் ?
பிரெஞ்சு மற்றும் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த 69 வயதான அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், செப்டம்பர் 14, 1955 அன்று சிகாகோவில் பிறந்தார். அவர் 2023 முதல் ஆயர்களுக்கான டிகாஸ்டரியின் தலைவராகவும், லத்தீன் அமெரிக்காவிற்கான போன்டிஃபிகல் கமிஷனின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தில் வெண்புகை வெளியிடப்பட்டுள்ளது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை கத்தோலிக்க கிறிஸ்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22- ஆம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாடிகனில் உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் ரகசியமாக நடைபெற்றது.
இதற்காக சுமார் 250 கார்டினல்கள் உலகம் முழுவதும் இருந்து வாடிகன் நகருக்கு வந்துள்ளனர். இருப்பினும் 80 வயதுக்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே போப் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்களாக இருப்பார்கள். போப் தேர்வு செய்யப்படும் வரையில் கார்டினல்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!