Skip to content

ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது- உபரிநீர் வௌியேற்றம்

தொடர் கனமழை காரணமாக திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியப்பனூர் அணை 27 வது முறையாக நிரம்பியுள்ளது. ஜவ்வாதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் 26 அடி உயரம் கொண்ட ஆண்டியப்பனூர் அணை நிரம்பி 5 சென்டிமீட்டர் அளவிலான உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடை விதித்துள்ளனர். இருப்பினும் அதனை

கண்டுகொள்ளாமல் இரண்டு இளைஞர்கள் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரில் இறங்கி குளிக்கும் சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெளியேறும் உபரிநீரானது குரிசிலாப்பட்டு அணைக்கட்டு, மாடப்பள்ளிஏரி, செலந்தம்பள்ளி ஏரி, சிம்மணப்புதூர் செக்டேம் வழியாக கொட்டாறு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாற்றை சென்று அடைகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!