பொங்கலையொட்டி சென்னையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு இன்று காலை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர். அவர்கள் முதல்வரை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு முதல்வரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் வாடா மல்லி கலரில் சட்டை, பட்டு வேட்டி அணிந்திருந்தார்.
பின்னர் முதல்வர் மகனும், அமைச்சருமான உதயநிதி, மனைவி துர்கா உள்ளிட்ட குடும்பத்தினருடன் மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். இதையடுத்து கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் நடந்த பொங்கல் விழாவில் முதல்வர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பொங்கலையொட்டி முதல்வர் வீட்டு வாசலில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்துடன் கோலம் வரையப்பட்டிருந்தது.