அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ளது நைனார் ஏரி. மழைக்காலங்களில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மழை நீரானது இந்த ஏரியில் உள்ள தடுப்பு மதகு வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. ஏரியை தாண்டி உள்ள மயானத்திற்கு மழைக்காலங்களில் இறப்பவர்களின் உடலை கழுத்தளவு நீரில் சுமந்து செல்ல வேண்டி இருந்தது. இதனால் மயானத்திற்கு செல்வதற்கு வசதியாக மேம்பாலம் கட்ட வேண்டும்

என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 40.91 லட்சம் மதிப்பீட்டில் சுடுகாட்டிற்கு செல்வதற்கு புதிய மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது இதனை அடுத்து ஏரியில் மேம்பாலம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி மற்றும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தனர்.

