Skip to content

அரியலூர்… 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது…

தமிழகம் முழுவதும் கடந்த நான்காம் தேதி பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று பத்தாம் வகுப்பு ஆங்கிலம் படத்திற்கானதேர்வு நடைபெற்றது. இத் தேர்வில் அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பாடத்திற்கான தேர்வினை மாணவர்கள் எழுதியுள்ளனர். அப்பொழுது அங்கு சென்ற சிறப்பு ஆய்வு படையினர் ஒவ்வொரு மாணவர்களின் அடையாள அட்டையினை சோதனை செய்துள்ளனர். அதில் முகமது அலி என்பவருக்கான அடையாள அட்டையை சோதனை செய்த போது அட்டையில் தேர்வு எழுதுபவரின் வயதிற்கும், மையத்தில் தேர்வு எழுதுபவரின் தோற்றத்திற்கும்

பெரிய வேறுபாடு இருந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அதில் தேர்வு எழுத வேண்டியவர் முகமது அலி என்றும் ஆனால் அவருக்கு பதிலாக அவருடைய அண்ணன் மகனான வாழப்பாடியை சேர்ந்த முகமது அஸ்லாம் என்ற வாலிபர் தேர்வு எழுதி வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேளூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தேளூர் காவல் நிலைய போலீசார் முகமது அஸ்லாமை கைது செய்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சித்தப்பாவிற்காக மகன் தேர்வு எழுதிய நிகழ்வு அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தேர்வு எழுதுவதற்கு முன்பே மாணவர்களின் அடையாள அட்டையை தேர்வு மைய பொறுப்பாளர்கள் சோதித்தனாரா? இந்த ஆள் மாறாட்ட நிகழ்வில் வேறு யாராவது தொடர்பு உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!