Skip to content

அரியலூர்-விபத்தில் மூளைச்சாவு-உடல் உறுப்பு தானம்-அரசு மரியாதை

அரியலூர் வட்டம் கருப்பூர் சேனாபதி ஊராட்சிக்குட்பட்ட கருவிடைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் கடந்த (29-04-2025) செவ்வாய்க்கிழமை அன்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானார். மேற்படி விபத்துக்குள்ளானவரை அரியலூர் அரசு பொது மருத்துவமனை கல்லூரியில் முதலுதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நடராஜன் மூளைசாவு ஏற்பட்டு இறந்துவிட்டார். நடராஜன் தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதனையடுத்து இறந்த நடராஜனின் உடலுக்கு அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜன் மற்றும் தாசில்தார் முத்துலட்சுமி ஆகியோ ரஷ் இன்று (03-5-1015) நடராஜனின் இல்லத்திற்கு சென்று, அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்தனர்.
error: Content is protected !!