அரியலூர் மாவட்டம் சின்ன ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவர் பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலம் அருகே வரும்போது பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிகுரும்பலூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமரன் என்பவர் ஓட்டி வந்த கார் ராஜதுரை ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத வகையில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 20 அடி பள்ளத்தில் விழுந்து ராஜதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இதனால் அதிர்ச்சி அடைந்த காரை ஓட்டி வந்த செந்தில்குமரன் தப்பி ஓடினார். சம்பவம் குறித்து அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த அரியலூர் போலீசார் கார் உரிமையாளரை தேடி வருகின்றனர்.