அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 15வது தேசிய வாக்காளர் தினத்தை
முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி இன்றைய தினம் தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் வரைந்த விழிப்புணர்வு கோலங்களையும் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து பள்ளி, மாணவ, மாணவியர்களின் வாக்காளர் தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளான உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, தேர்தல் வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் இதர அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.