Skip to content

அரியலூர் மாவட்டத்தில் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் அக்னி வெயில் தொடங்கியுள்ளது. வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் இன்று மதியம் முதல் குளிர்ந்த சீதோசனநிலை நிலவியது. இதனை அடுத்து சூரைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. தெருக்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் வெப்பத்தால் வாடி வதங்கிய மக்களுக்கு இந்த மலை பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. அரியலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் கோடை வெயில் தொடங்கிய நிலையில் மழை பெய்ததும், இரண்டு நாட்களில் மீண்டும் ஆங்காங்கே மழை பெய்வதும் அக்னி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் என்பதால் மக்களிடையே மகிழ்ச்சியின் நிலவுகிறது.
error: Content is protected !!