Skip to content

அரியலூர்…தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரியலூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு பணிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எட்டாவது பட்டாலியன் அசிஸ்டன்ட் கமிஷனர் சிவகாந்த் தலைமையில் 50

எல்லை பாதுகாப்பு படையினர் அரியலூருக்கு வருகை தந்துள்ளனர்.
இதனை அடுத்து இன்று அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசுவேஸ் பா. சாஸ்திரி தலைமையில் ஏ டி எஸ் பி முத்துமல் செல்வன் அரியலூர் டிஎஸ்பி சாலைராம் சக்திவேல், தேர்தல் டிஎஸ்பி சண்முகம் ஆயுதப்படை டிஎஸ்பி அருள்முருகன் ஆகியோர் தலைமையில் 50 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட ஆயுதப்படை ஊர்காவல் படை காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்ட 300 பேர் கொடி அணிவகுப்பை அரியலூர் நகரில் இன்று நடத்தினர். அரியலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி, அண்ணா சிலை, மார்க்கெட் தெரு, மங்காய் பிள்ளையார் கோவில் தெரு, தஞ்சாவூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே நடைபெற்ற கொடி அணிவகுப்பு, ஒற்றுமை திடலில் சென்றடைந்தது.
பின்னர் காவலர்கள் மத்தியில் பேசிய அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி, அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும், பொதுமக்கள் அச்சமின்றி தங்கள் வாக்கினை செலுத்துவதற்காகவும், இந்த கொடி அணிவகுப்பு இன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து காவலர்களின் கொடி அணிவிப்பு, அரியலூர் மாவட்டம் முழுவதும், முக்கிய நகரங்களில் நடைபெறும் என்று கூறினார். மேலும் பொதுமக்கள் தங்கள் வாக்கினை செலுத்துவதற்கு உரிய நம்பிக்கையை, காவலர்களாகிய நாம் ஏற்படுத்திட வேண்டும் என்றும், அதற்காக அனைவரும் தங்களது கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் காவலர்களிடம் கூறினார். துப்பாக்கி ஏந்திய எல்லை பாதுகாப்பு படையினர், தலைக்கவசம், உடல் பாதுகாப்பு சாதனம், தடுப்பு கவசம் ஆகியவற்றை அணிந்த ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் நகரின் முக்கிய வீதிகளில் அணிவகுத்து வந்தது பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வகையில் அமைந்தது.

error: Content is protected !!