அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ரூபாய் 7.50 கோடி மதிப்பிலான 231 புதிய வாகனங்களை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று கொடியை சேர்த்து துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுக்கு ரூபாய் 90 இலட்சம் மதிப்பிலான 10 புதிய ஜீப் வாகனங்களை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ஊராட்சிகள் தோறும்
சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் தயாரிக்கப்பட்ட ரூபாய் 6 கோடி மதிப்பிலான 216 புதிய மின்கல வண்டிகள் மற்றும் ரூபாய் 47 இலட்சம் மதிப்பிலான மோட்டார் வாகனங்களையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி அரியலூர் எம்.எல்.ஏ சின்னப்பா மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் சிவராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.