டிஜிபி சங்கர்ஜிவால் இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் . தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் மூன்று பேரை சிறையில் அடைத்துள்ளோம்
தகவலாளர்கள் வழங்கிய நுண்ணறிவுத் தகவல்களுடன் சிறப்புப்படை தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் ஆந்திரப்பிரதேச மாநிலம் அன்னமய மாவட்டம், கடப்பா அருகே உள்ள ராயச்சோட்டியில் அவரை பிடித்தனர். இந்த மிகவும் இரகசியமான மற்றும் ஆபத்தான நடவடிக்கையின்போது சிறப்புபடையால் மற்றொரு தேடப்படும் குற்றவாளி முகமதுஅலி @ அலி @ யூனுஸ் @ ஷேக் மன்சூரும் அடையாளம் காணப்பட்டார். குறுகியகால இடைவெளியில், ஆந்திர காவல்துறையின் உதவியுடன் அபுபக்கர்சித்திக் மற்றும் முகமதுஅலி ய அலி @ யூனுஸ் @ ஷேக் மன்சூரை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் 01.07.2025 அன்று எழும்பூர் XIV MM நீதிமன்றத்தால் நீதிமன்றகாவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பிரிவிற்கும் அபுபக்கர் சித்திக் அளித்த தகவல்களை, தமிழ்நாடு ATS, ஆந்திரகாவல்துறை மற்றும் மத்திய நுண்ணறிவு உடனடியாகப் பகிர்ந்துகொண்டது. இந்தத் தகவல்களின் அடிப்படையில், ஆந்திரப்பிரதேச காவல்துறை அபுபக்கர் சித்திக்கின் வீட்டில் சோதனை நடத்தி வெடிபொருட்கள் மற்றும் ஏராளமான மின்னணு பொருட்களைக் கண்டுபிடித்தனர்.
அபுபக்கர் சித்திக் மற்றும் முகமதுஅலி @ அலி @ யூனுஸ் @ ஷேக்மன்சூரை விரைவாக தண்டிப்பதை உறுதிசெய்ய ATS துரித சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று இவ்வாறு தெரிவித்தார்.
