ராஜா மடம் காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு யாகசாலை அமைக்கப்பட்டு நேற்றையிலிருந்து யாகசாலையில் யாகம் வளர்க்கப்பட்டு இன்று காலை
யாகசாலை உள்ள காளியம்மனுக்கு தீபாரதனை நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது மேளங்கள் முழங்க தப்புத்தாளங்கள் முழங்க ஊர்வலமாக கடம் கோவிலை சுற்றி வந்தது பின்னர் கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்