Skip to content

அசோக்குமார் அமெரிக்கா செல்ல ஐகோர்ட் அனுமதி

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் . இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ள தேதி உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், ஒருவேளை அசோக்குமார் வெளிநாடு செல்ல அனுமதியளித்தால் அவரது மனைவியின் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்க வேண்டுமென்று வாதிட்டார்.

அசோக்குமாருடன் அவரது மனைவியும் அமெரிக்கா செல்ல உள்ளதால் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க இயலாது எனவும் அவரது மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அசோக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, ஒருவேளை அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படும்பட்சத்தில் என்னென்ன? நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை  8ம் எட்டாம் தேதிக்கு(இன்று) தள்ளிவைத்தனர்.

அதன்படி இன்று  வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமாருக்கு  அமெரிக்கா செல்ல  நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி அசோக்குமார் ரூ.5 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும். மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!