கும்பகோணம் அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ சிவ லலிதா மண்டலி குழுவினர் கூட்டு பிராத்தனை ஆக தேசியக்கொடி கையில் ஏந்தி இந்திய ராணுவம் வெற்றியடைய வேண்டியும் நாடு அமைதி பெற வேண்டியும் ஸ்ரீ லலிதா சஹஸ்நாமம் பாராயணம் பாடி பிரார்த்தனை செய்தனர்
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் செந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சில தினங்களாக ஏவுகணை தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் தீவிரவாத முகாம்களை அழித்திருக்கிறது.
இந்திய ராணுவம் வலிமை பெறவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உலக நாடுகள் ஆதரவு கரம் கொடுக்கவும் உலகளாவிய பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும் இந்திய ராணுவம் வலிமை பெற வேண்டும் நாடு அமைதி பெற வேண்டும் போன்ற பிரார்த்தனையோடு அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ சிவ லலிதா குழுவினர் கூட்டு பிராத்தனை ஆக தேசியக்கொடி கையில் ஏந்தி ஸ்ரீ லலிதா சஹஸ்நாமம் பாராயணம் பாடி பிரார்த்தனை செய்தனர்
