நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977-9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில், நேபாளத்தில், அரசுக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், இந்திய சுற்றுலாப் பயணி தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து பெண் சுற்றுலாப் பயணி ஒருவர பேசிய வீடியோ வைரல். அதில் போராட்டக்காரர்கள் கைகளில் குச்சியுடன் துரத்தியதாக குறிப்பிட்டுள்ளார். நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் தங்கள் தற்போதைய இருப்பிடத்தில் பாதுகாப்பாக இருக்கவும், தெருவில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், உள்ளூர் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், நேபாளத்திற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், நிலைமை சீரடையும் வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த திங்களன்று போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்