திருப்பரங்குன்றம் வேள்வி சாலையில் தமிழ் வேள்வியாளர்கள் , தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டதால் , வேள்விச் சாலைக்கு சென்று கேள்வி கேட்ட சிம்மம் சத்தியபாமா அம்மையார் மீது இராச பட்டர் அடியாட்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதலாம் படை வீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 14 காலை 5.30 முதல் 6 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறவுள்ளது. இதற்காக கோயிலுக்குள் யாகசாலைகள் அமைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. யாகசாலை பூஜையில் தமிழ் ஓதுவார்கள் உள்ளார்களா என பார்க்கச் சென்ற தெய்வத்தமிழ் பேரவை பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வேள்வி சாலையில் தமிழ் வேள்வியாளர்கள் , தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டதால் , வேள்விச் சாலைக்கு சென்று சிம்மம் சத்தியபாமா அம்மையார் கேள்வி கேட்டுள்ளார். அவர் மீது இராச பட்டர் அடியாட்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், யாகசாலை பூஜை நடைபெறும் இடத்திற்கு வெளிநபர்கள் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.