தஞ்சாவூர் மாவட்டம்ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் இன்று 5 ம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில், அலுவலகத்தில் இருந்த கண்ணாடி, கதவுகள் உடைந்த நிலையில், இளையராஜா, அருண் ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, பேரூராட்சி தலைவர் ம. க. ஸ்டாலினை கொல்ல முயற்சியா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தபோது பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின் அலுவலகத்தின் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேரூராட்சி தலைவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி… தஞ்சையில் பரபரப்பு…
- by Authour
