Skip to content

யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் வடமலை ராஜபாண்டியன். இவருக்கு சொந்தமான 1.6 மீட்டர் நீளமுள்ள பெரிய யானை தந்தத்தை மதுரையை சேர்ந்தவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார், வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மதுரை மாவட்டம் வளர் நகர் பகுதிக்கு காரில் கடத்தி வரப்பட்ட யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயன்ற இடைத்தரகர்கள் மணிகண்டன், சுதாகர், ரகுநாத், சுப்பிரமணி, ரமேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தலைமறைவாக உள்ள போடி ஜமீன் வாரிசான வடமலை ராஜபாண்டியனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!