தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி வெனிசுலா (31). நேற்று காலை வெனிசுலா, யாகப்பா நகர் அருகில் தனது மகள் படிக்கும் தனியார் பள்ளிக்கு தனது ஸ்கூட்டியில் அழைத்து சென்றார்.
பின்னர் வீட்டிற்கு வெனிசுலா யாகப்பா நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டியை பின்தொடர்ந்து ஒரு பைக்கில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் வெனிசுலா கழுத்தில் இருந்த தாலி செயினை பறிக்க முயற்சி செய்துள்ளனர். உடன் சுதாரித்துக் கொண்ட
வெனிசுலா சட்டென்று வண்டியை நிறுத்திவிட்டு தாலி செயினை இறுக்கி பிடித்துள்ளார். தொடர்ந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அந்தப் பகுதியில் போக்குவரத்து அதிகம் இருந்ததால் இந்த சமூகத்தை பார்த்து பொதுமக்கள் ஓடி வந்ததால் அந்த மர்ம நபர்கள் தங்கள் பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து வெனிசுலா தஞ்சாவூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப் பகலில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் பெண்ணிடம் இருந்து செயின் பறிக்க நடந்த இந்த முயற்சி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.