நாளை ஆடி 18 முன்னிட்டு பூக்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இரு மடங்கு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி – மல்லிகைப்பூ கிலோ 900 ரூபாய்க்கு ஏலம் போனது. ஆடி மாதமான இந்த மாதத்தில் அனைத்து கோவில்களிலும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நாளை ஆடி 18 முன்னிட்டு கரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள மாரியம்மன் புஷ்ப வியாபாரிகள் கமிஷன் மண்டியில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பூக்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் பூக்களின் விலை இரண்டு மடங்கு விலை உயர்ந்து
விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் பூக்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மல்லிகை பூ கிலோ 900 ரூபாயக்கும், முல்லை கிலோ 400 ரூபாயக்கும். சம்மங்கி கிலோ 350 ரூபாயக்கும், அரளி கிலோ 250 ரூபாயக்கும், ரோஜாப்பூ கிலோ 300 ரூபாயக்கும், துளசி 4 கட்டு ரூ.100, மருவு 4 கட்டு ரூ.100 என பூ மார்க்கெட்டில் விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது.