போலீஸ் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த ஆட்டோ டிரைவர்
திருச்சி பாலக்கரை போலீசார் நேற்று இரவு காஜா பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது அவ்வழியே ஆட்டோ ஒட்டி வந்த வாலிபர் ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படுகிறது .இதனையடுத்து மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வாலிபர் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தையில் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.இது குறித்து எஸ்.எஸ்.ஐ ராஜமாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல் வாரி துறை ரோடு பகுதியை சேர்ந்த ரோகித் குமார் ( 24 ) என்பவரை கைது செய்தனர்.
நண்பரை கட்டையால் தாக்கியவர் கைது
திருச்சி கீழ தேவதானம் சரவணா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் ( 23 ), பள்ளி நண்பர்களான ரத்தினசபாபதி, லோகேஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவத்தன்று இரவு முத்து வேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கீழ தேவதானம் பகுதிக்கு வர சொல்லினர். பின்னர் அங்கு வந்து காத்திருந்த முத்து வேலை நண்பர்கள் கட்டையால் தாக்கி பணம் கேட்டு மிரட்டினர்.இது குறித்து முத்துவேல் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து தேவதானம் சஞ்சீவி நகர் குறிஞ்சி தெரு பகுதியை சேர்ந்த லோகேஸ்வரனை (24) கைது செய்தனர்.
சிறுமி தற்கொலை
திருச்சிநாச்சி குறிச்சி வாசன் வேலி பத்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்.இவரது மகள் அவந்திகா (வயது 9).இவர் வீட்டிற்கு வெளியே விளையாடுவதற்காக தந்தையிடம் அனுமதி கேட்டார்.அவர் வெயிலாக உள்ளது.வெளியே போய் விளையாட கூடாது என்று அனுமதி மறுத்தார்.இதனால் விரக்தி அடைந்த அவந்திகா வீட்டில் யாரும் இல்லாத போது பெட்ரூமில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.உடனே சிறுமியின் உடலை மீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி அவந்திகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.