தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த ஒரு வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், நாங்கள் உடல் வலிக்கு ஆயுர்வேத முறைப்படி மசாஜ் செய்கிறோம். இதனால் பல்வேறு உடல் பிரச்சினைகள் தீரும் என கூறினார். எனவே மாதாக்கோட்டை பகுதிக்கு வரும் படி கூறி அதற்கான முகவரியையும் அந்த பெண் கூறினார்.
இதனை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் சம்பவ இடத்திற்கு சென்றார்.
அந்த வீட்டில் 3 பெண்கள் இருந்தனர். அப்போது போனில் பேசிய பெண், மசாஜ் தொழில் செய்யவில்லை. மாறாக பாலியல் தொழில் செய்கிறோம். இதற்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் என்னிடம் தற்போது பணம் இல்லை. வெளியில் சென்று பணம் எடுத்து வருகிறேன் என கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
அந்த வாலிபர் உடனடியாக இது பற்றி தஞ்சை தமிழ்பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரிடம் போனில் பேசிய பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் பழைய மாரியம்மன் கோவில் சின்னக்கடை தெருவை சேர்ந்த ரெஜினா பானு (43) என்பதும், பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜினாபானுவை கைது செய்தனர். மற்ற 3 பெண்களை எச்சரித்து அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.