ரோடு சோ நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று கோவை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று இரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை கோவை விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் பாலக்காடு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபின் பிற்பகல் சேலம் செல்கிறார்.