நீலகிரி மாவட்டம் குன்னூரில் உபாசி வளாகம் மற்றும் தென்னிந்திய தோட்ட அதிகாரிகள் சங்க அலுவலகம் உள்ளது. மேலும், அப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் கரடி சுற்றித்திரிந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கரடி சுற்றித்திரிவதால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடும்படி வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடி
- by Authour
