தமிழ்நாடு அரசு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் (56). கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனார். அவருக்குச் சமீபத்தில் மூளையில் டியூமர் கண்டறியப்பட்ட நிலையில், கடந்த இரு மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவர் தூத்துக்குடி மாவட்டம், வாழையடி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.

