இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.
நாட்டில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை 2016 ஆம் ஆண்டு முதல் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான (2025) கல்வி நிறுவனங்களில் தரவரிசைப் பட்டியலை தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் எப்போதும்போல் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த உயர்க்கல்வி நிறுவனங்களுக்காக தேசிய அளவிலான பட்டியலில் கடந்த 2 6 ஆண்டுகளாகவே ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்திருந்த நிலையில், சிறந்த புத்தாக்கம், கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்காக தொடர்ந்து 7 3வது முறையாக இந்த ஆண்டும் முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது.
இந்த தேசிய அளவிலாக உயர்க்கல்வி மையங்களின் பட்டியலில் இடம்பெற சுமார் 8,686 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில் தென்னிந்தியாவில் இருந்து மட்டும் 3,344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. இந்த தேசிய அளவிலான உயர்க்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாவது இடத்தையும், மும்பை ஐஐடி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. பிடித்துள்ளன. ஒட்டுமொத்த உயர்கல்விக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.