Skip to content

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வந்தார். 8வது பிக்பாஸ் சீசனின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், ஜாக்லின், செளந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், ஆர்.ஜே. ஆனந்தி, சுனிதா, ரஞ்சித், தர்ஷா குப்தா, சஞ்சனா, அக்‌ஷிதா, அர்னாவ், சத்யா மற்றும் தீபக் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.  கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இறுதி நிகழ்ச்சி இன்று மாலை ஒளிபரப்பாக உள்ளது. ஆனால், இந்த இறுதிப் போட்டியில் முத்துக்குமரன் வெற்றி பெற்று இருப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!