Skip to content

பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் முடிவு

பீகார் மாநிலத்தில் இன்னும் 3 மாதங்களில்  சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது.  இதையொட்டி  வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இப்பணியானது வரும் 25-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகார் வாக்காளர் பட்டியலில் இறந்த அல்லது இடம்பெயர்ந்த, இரட்டைப்பதிவு   வாக்காளர்கள் என 52 லட்சம் பேரை நீக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்தின்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 1-ம் தேதி வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு முன் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவது அதன் அரசியலமைப்பு கடமையாகும். முழு செயல்முறையும் நிலையான மற்றும் அதிகார வரம்புக்குட்பட்ட முறையில் நடத்தப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!