பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 240 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மீதம் உள்ள 3 தொகுதிகளில் பா.ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையே இன்றும் பேச்சுவார்த்தை நடந்தது. இதனையடுத்து தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பஸ்வான் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா, ராஸ்ட்ரிய லோக் மோர்சா கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
