Skip to content

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை.. முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்

திருச்சி கன்டோன்மெண்ட் ஈத்கா மைதானத்தில் ஆற்காடு நவாப் என்டோமென்ட் அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன், ஆற்காடு நவாப் எண்டோமென்ட் அறக்கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி பஷீர் அகமது,முஸ்லிம் இலக்கிய மன்றத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் சையது ஜாபர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
“இந்த நாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். புனித ரமலான் மாதத்தில் நாம் எல்லோரும் இறைவனை வேண்டுவது உலக அமைதி நிலைக்க வேண்டும் என்பதற்காகத்தான்,” .
உலக அரசியல் சூழ்நிலை கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
“இன்று உலகம் மிகக் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகளுக்கிடையேயான பதற்றம் உலக மக்களை பாதித்து வருகிறது. இந்த சூழலில் அனைத்து நாடுகளும் அமைதியை முன்னிறுத்த வேண்டும். உலகிற்கு இன்று தேவையானது போர் அல்ல, அமைதிதான்,”
“நேற்று வரை நான்கு முனை போட்டியாக இருந்த தேர்தல், தற்போது ஐந்து முனை போட்டியாக மாறியுள்ளது. புதிய கூட்டணிகள் உருவாகுவது ஜனநாயக நாட்டில் இயல்பான ஒன்றுதான். இன்னும் பல முனை போட்டிகளாக கூட மாறலாம். யாரும் தேர்தலில் போட்டியிடலாம்,
“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி மிகவும் வலிமையானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சியால் 80%க்கும் மேற்பட்ட மக்கள் திருப்தி அடைந்துள்ளனர். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. எனவே எந்த அளவுக்குப் போட்டி இருந்தாலும், இந்த தேர்தலில் அந்த கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம், .
அ.தி.மு.க. கூட்டணி குறித்து அடிக்கடி டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால் இங்கு வந்து கூட்டணி குறித்து தெளிவாக பேசுவதில்லை. இது தமிழ்நாடு முதலமைச்சர் கூறியது போல, இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான போட்டியாக மாறி வருகிறது என்பதை காட்டுகிறது,”
“தமிழ்நாட்டில் திராவிட சிந்தனை, தமிழ் பண்பாடு வேரூன்றி உள்ளது. இந்த மண்ணில் பாஜக கொள்கைக்கு இடமில்லை. ‘தாமரை’ வளருவது குளத்திலும் குட்டையிலும் தான்; ஆனால் தமிழ்நாடு ஒரு பெருங்கடல். இந்த தமிழ்கடலில் தாமரை மலர முடியாது,” .

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!