Skip to content

கரூரில் பாஜ பொதுக்கூட்டம்.. நயினார் பேசும்போது கலைந்த தொண்டர்கள்

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வரும் “தமிழக தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது.

கரூர் 80 அடி சாலை பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக சேலம் கோட்டப்

பொறுப்பாளர் ராமலிங்கம் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியபோது ஓரளவு மக்கள் கூடியிருந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேடையில் உரையாற்றத் தொடங்கினார்.

அப்போது தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும், மத்திய அரசின் சாதனைகள் குறித்தும் பேசிக்

கொண்டிருந்த போதே, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் மெல்ல மெல்ல எழுந்து செல்லத் தொடங்கினர்.

மாநில தலைவர் பேசிக் கொண்டிருக்கும் போதே இருக்கைகள் காலியானதும் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதும் அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக மாநிலத் தலைவர் வாகனத்தில் இருந்து இறங்கியதும் அனைவரும் சால்வை அணிவித்தனர் அப்போது மேடைக்கு முன்னாள் சென்ற பாஜக சேலம் கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம் சென்றார் அப்போது அவருக்கு அங்கிருந்த பொதுமக்கள் மலர்களை தூவினர் அப்போது அவர் எனக்கு வேண்டாம் பின்னாடி தலைவர் வருகிறார் அவருக்கு மலர் தூவுங்கள் என்று கூறினார்.

error: Content is protected !!