திருச்சி, பீமநகர் பா.ஜ.க. சக்தி கேந்திரா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்
பீமா நகர் செடல் மாரியம்மன் கோவில் முன்பு பாஜக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர் கௌதம் நாகராஜன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் ஒண்டி முத்து , பிரச்சார பிரிவு மாநிலச் செயலாளர் சந்துரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கௌதம் நாகராஜன் பேசும் போது, கடந்த
11 அரை ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி மீது இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டும் யாராலும் கூற முடியவில்லை.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. தி.மு.க. ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. எனவே இந்த ஆட்சியை அகற்ற தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்
என்றார். கூட்டத்தில்
அதிமுக பகுதி செயலாளர் எம்.ஆர். ஆர். முஸ்தபா, அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர்
குரு ராஜன், மண்டல் தலைவர் வேணுகோபால்,
ஐஜேகே மாவட்ட செயலாளர்
ராபர்ட் கிறிஸ்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

