Skip to content

நடிகர் கார்த்திக், அமீர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கார்த்திக் முத்துராமன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக், தியாகராயர் நகரில் உள்ள டைரக்டர் அமீர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி மர்மநபர்கள் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மோப்பநாய் உதவியுடன் விடிய விடிய நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனால் அப்பகுதயில் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!