Skip to content

ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

தலைநகர் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின் நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, அபிராமபுரத்தில் உள்ள நடிகை ரம்யாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த மெயிலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இந்த மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!