Skip to content
Home » பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

  • by Senthil

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடந்து வருகி்றது. நேற்று நடந்த வேதியியல் தேர்வில்  பல கேள்விகள் மாணவர்களுக்கு  அதிர்ச்சியை அளித்து உள்ளது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள்,  கல்லூரி கல்வி தரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் வேதனையுடன்   கூறினர்.

அதாவது மூன்று மதிப்பெண் பகுதியில் ‘அணைவு சேர்மங்கள்’  என்ற 5வது பாடத்தில் இருந்து, 33வது கேள்வி  கேட்கப்பட்டது. அந்த கேள்வி  பாடத்தில் இடம் பெறாதது. இதுபோல் 5 மதிப்பெண் பகுதியில் 38 வது கேள்வி  ‘ஆ’ பிரிவில் ‘நைட்ரஜன் சேர்மங்கள்’ என்ற 13வது பாடத்தில் இருந்து இடம்பெற்றுள்ளது.

அந்த கேள்வியில் ‘சேர்மம் (சி) ஆனது அடர் ஹெச்.சி.எல்., (ஹைட்ரோ குளோரிக் அமிலம்) உடன் வினைபுரிந்து…’ என்ற வரி இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த வரியில் ‘சேர்மம் (சி) ஆனது அடர் ஹெச்.சி.எல்., (ஹைட்ரோ குளோரிக் அமிலம் ) மற்றும் நீருடன் வினைபுரிந்து… என இருக்க வேண்டும். ‘நீருடன் வினை புரிந்து’ என்ற வார்த்தைகள் இல்லை.மேலும் ‘675 கெல்வினுடன் வினைபுரிந்து’ என்ற வார்த்தையும் இடம் பெறாமல், அந்த கேள்வி  முழுமை பெறாமல் உள்ளது. இதுபோன்ற குழப்பங்களால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.

இது குறித்து பிளஸ் 2 வேதியியல் ஆசிரியர் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கேள்வித்தாள் தயாரிப்பு குழு மனசாட்சியின்றி கல்லுாரி மாணவர்களுக்கான தரத்தில் தயாரித்துள்ளதை  ஏற்கமுடியாது.இது, மாணவர்களை சோர்வடைய வைத்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறைக்கு மாவட்டங்கள் வாரியாக தெரியப்படுத்தியுள்ளோம், மாணவர்களின் உணர்வுகளை மதித்து 8 மதிப்பெண்களை ‘போனஸ்’ மதிப்பெண்ணாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!