ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பத்வேல் மண்டலத்தில் உள்ள சிந்தபுத்தாயா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூர் சென்று மீண்டும் சொந்த ஊர் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார் கடப்பாவில் உள்ள குவ்வால செருவு மலைப்பாதை சாலையில் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த லாரியின் பிரேக் பைலியர் ஆனதால் கார் மீது அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் மற்றொரு நபர் காரில் சிக்கிக் கொண்டு அதே இடத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் இருவரை உள்ளூர்வாசிகள் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.