Skip to content

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி க்ரைம்

திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( 62 ). இவர் ஒரு உடல் ஊனமுற்றவர், அவரது மனைவி பார்வையற்றவர், நேற்று இவர் தனது
மனைவியுடன் கே.கே. நகரில் உள்ள வங்கிக்குச் சென்றனர். மதியம் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, ​​ மர்ம நபர் விட்டின் பின்புறக் கதவு பூட்டு மற்றும் பீரோ பூட்டை உடைத்து வீட்டிற்குள் உள்ளே நுழைந்து பீரோவிலிருந்து 18 கிராம் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர்.இது கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும்…

மதுரை மாவட்டம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி (44). இவர் சென்னையிலுள்ள டிராவல்ஸில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் மார்ச்.4 ம் தேதி மலேசியாவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளை அவர் தனது காரில்
ஏற்றிச் சென்றார், அவர்கள் திருச்சிக்கு வந்து சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டனர். மாலை 5 மணியளவில், சுற்றுலாப் பயணிகள் சத்திரம் பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தனர், முரளி காருக்குள் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று காலை லாட்ஜ் பாதுகாப்பு அதிகாரிகள் முரளி மயக்க நிலையில் வாயிலிருந்து நுரை வந்ததைக் கண்டறிந்தனர். உடனடியாக, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரைப் பரிசோதித்து, இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!