Skip to content

கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

  • by Authour

கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வரை ராட்ச குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று வெள்ளியணை பகுதியில் இந்த கூட்டுக் குடிநீர் திட்ட ராட்ச குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெளியேறிய தண்ணீர் வெள்ளியணை கடைவீதி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட அலுவலகத்துக்கு போன் மூலம் தகவல் அளித்தனர். காவிரி கரையில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் நீர் உந்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது. சுமார் 1

மணி நேரம் தண்ணீர் வெளியேறியதால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெள்ளியணை கடைவீதியில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வெள்ளியணை கடைவீதியில் உள்ள பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அவதி அடைந்தனர்.

error: Content is protected !!