சென்னை, கோயம்பேட்டு புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று (செப்டம்பர் 12) அதிகாலை அரசு பேருந்து ஒன்று திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த (TNSTC) இந்த பேருந்து, நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது திருடப்பட்டதாகத் தெரிகிறது. சென்னை கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த அரசுப் பேருந்தை கடத்திச் சென்ற மர்ம நபர் கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட பேருந்து ஆந்திராவின் நெல்லூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்சை கடத்தி சென்றவர் கைது
- by Authour
