சென்னை, குன்றத்தூர் அருகே பஸ் படியில் பயணித்தபோது கீழே விழுந்து பள்ளி மாணவனின் கால்கள் துண்டானது. கொல்லச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் கீழே விழுந்ததில் அ வரது காலில் பஸ்சின் சக்கரம் ஏறியது. இதில் சக மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். தகவல் அறிந்துவந்த குன்றத்தூர் தேரடி அருகே விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கால்துண்டான பள்ளி மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தை உணராமல் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி செல்கின்றனர். பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் பயணிகளை போலீசார் கண்காணித்து இறக்கி விட வேண்டும். அப்போதுதான் விலைமதிப்பற்ற பயணிகளின் உயிரை காப்பாற்ற முடியும்.