Skip to content

மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை…கடன் தொல்லையால் விபரீதம்…

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி (56). இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். தொழிலதிபரான இவர் எலக்ட்ரானிக் கடை நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சிரஞ்சீவிக்கு கடன் அதிகரித்துள்ளது.
இதனால் மனமுடைந்த சிரஞ்சீவி, நேற்று இரவு மனைவி மற்றும் இரண்டு மகன்களை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நீலாங்கரை போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!